அம்பேத்கரின் நினைவு தினம் – மு.க ஸ்டாலின், டிடிவி தினகரன் பதிவு!

by Lifestyle Editor
0 comment

இந்திய அரசியல் சாசனத்தை வகுத்த அண்ணல் அம்பேத்காரின் நினைவு தினத்தையொட்டி திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவரது திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.

இது குறித்து மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “அறிவுச் சூரியன், இந்நூற்றாண்டின் புதிய புத்தர்! எல்லோருக்குமான வழிகாட்டி -#BabasahebAmbedkar-ன் நினைவுநாளில், அவர் காட்டிய சமூகநீதிப் பயணத்தில் நடை போட்ட முத்தமிழறிஞர் கலைஞரின் திருவாரூர் இல்லத்தில் அண்ணல் #அம்பேத்கர் படத்துக்கு மரியாதை செலுத்தினேன்! சமூகநீதிச் சுடர் காப்போம்!” என பதிவிட்டுள்ளார்.

அதே போல அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் தனது ட்விட்டர் பதிவில், “இந்திய அரசியல் சாசனத்தின் சிற்பி, ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளி, அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினம் இன்று. உலக நாடுகள் போற்றக்கூடிய சட்டத்திட்டங்களை நமக்கு வகுத்து தந்து ஒவ்வொரு குடிமகனும் சுதந்திரத்தோடும், சமநிலையோடும் வாழ்வதற்கான அடிப்படையை ஏற்படுத்தியவர். டாக்டர் அம்பேத்கர் அவர்களின் அளப்பரிய பணிகளை எந்நாளும் நினைவுகூர்ந்து போற்றிடுவோம்” என குறிப்பிட்டுள்ளார்.

Related Posts

Leave a Comment