அதிக பிராட்பேண்ட் வாடிக்கையாளர்கள் இணைப்பு

by Lifestyle Editor
0 comment

மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் செப்டம்பர் 2020 மாதம் வரையிலான காலக்கட்டத்தில் டாப் 5 பிராட்பேண்ட் சேவை வழங்கும் நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இதில் வையர்டு மற்றும் வயர்லெஸ் சேவை சேர்க்கப்பட்டு உள்ளது.

டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி பிஎஸ்என்எல் நிறுவனம் வையர்டு பிராட்பேண்ட் சேவை வழங்கும் நிறுவனங்களில் முதலிடம் பிடித்து இருக்கிறது. பிஎஸ்என்எல் சேவை சுமார் 78 லட்சம் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. வயர்லெஸ் பிரிவில் ஜியோ சுமார் 40.41 கோடி வாடிக்கையாளர்களுடன் முதலிடத்தில் உள்ளது.

வயர்லெஸ் பிரிவில் 4ஜி சிம் மற்றும் மொபைல் ஹாட்ஸ்பாட் டாங்கிள் உள்ளிட்டவை அடங்கும். அதன்படி வையர்டு மற்றும் வயர்லெஸ் பிராட்பேண்ட் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 55.85 சதவீத பங்குகளை கொண்டிருக்கிறது. செப்டம்பர் 2020 மாதத்தில் மட்டும் ஜியோ பைபர் சேவையில் மூன்று லட்சம் வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர்.

செப்டம்பர் 30 வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவின் டாப் 5 வையர்டு பிராண்ட்பேண்ட் சேவை வழங்கும் நிறுவனங்கள் பட்டியலில் பிஎஸ்என்எல், பாரதி ஏர்டெல், அட்ரியா கன்வெர்ஜன்ஸ் டெக்னாலஜிஸ் (ACT), ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஹாத்வே கேபிள் உள்ளிட்டவை முறையே இடம்பெற்று இருக்கின்றன.

இதேபோன்று வயர்லெஸ் பிராட்பேண்ட் சேவை நிறுவனங்கள் பட்டியலில் ஜியோ, பாரதி ஏர்டெல், வோடபோன் ஐடியா, பி.எஸ்.என்.எல். மற்றும் டிகோனா உள்ளிட்டவை முறையே முதல் ஐந்து இடங்களில் உள்ளன.

Related Posts

Leave a Comment