27 ஆண்டுகளுக்கு முந்தைய கருவைக் கொண்டு பிறந்த குழந்தை: அமெரிக்காவில் நடந்த அதிசயம்

by Web Team
0 comment

அமெரிக்காவில் 27 ஆண்டுகளுக்கு முந்தைய கருவைக்கொண்டு தஹ்ரபோது குழந்தை பிறந்துள்ள அதிசயம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.

அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தை சேர்ந்தவர் டினா, பென் கிப்சன் தம்பதியர். திருமணம் ஆகியும் 5 ஆண்டுகளாக இவர்களுக்கு குழந்தை இல்லை. தொலைக்காட்சியில் வந்த விளம்பரத்தின் மூலம் கரு தத்தெடுப்பு பற்றி தெரிந்து கொண்டனர்.

அதன் பிறகு கரு தத்தெடுப்பிற்காக தேசிய கரு தத்தெடுப்பு மையத்தை நாடியுள்ளனர். இந்த தம்பதியர் 2017-ம் ஆண்டு அங்கு பாதுகாக்கப்பட்டிருந்த ஒரு கருவை தானம் பெற்று அதன் மூலம் எம்மா என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்தனர். அந்தக் குழந்தைக்கு இப்போது வயது 3.

இந்த நிலையில் மீண்டும் கரு தத்தெடுப்பின் மூலம் மீண்டும் ஒரு பெண் குழந்தை பெற்றார்கள். தற்போது பயன்படுத்தப்பட்ட கரு முட்டையானது கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டதாம்.

இதுபற்றி பெண் கிப்ஸன் கூறியதாவது,”தற்போது நிலவின் மீது இருப்பது போல உணர்கிறோம்,தற்போது எங்களுக்கு இரண்டாவது மால் பிறந்துவிட்டால்” என மகிழ்ச்சியாக தெரிவித்தார்.

Related Posts

Leave a Comment