இயக்குனரை குடையால் தாக்கிய கீர்த்தி சுரேஷ்

by Web Team
0 comment

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது ‘ரங் தே’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் நிதின் கதாநாயகனாக நடிக்கிறார். ஊரடங்கிற்கு முன் இந்தப் படத்தின் 75 சதவிகித படப்பிடிப்புகள் முடிவடைந்து விட்டது. இந்தாண்டு கோடையில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த இந்தப் படம் கொரோனா காலகட்டத்தால் தள்ளிவைக்கப்பட்டது.

படக்குழு தற்போது படத்தின் இரண்டு பாடல் காட்சிகளுக்காக துபாய் சென்றுள்ளது. இதன் ஷூட்டிங்கிற்கு பிறகு படக்குழு ஐரோப்பா செல்ல இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கிற்கு முன் ஐரோப்பாவின் காட்சிகளை இந்தியாவிலேயே எடுக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால் சில காரணங்களுக்காக இயக்குனர் வெங்கட் மற்றும் படக்குழு அந்த காட்சிகளை ஐரோப்பாவில் படமாக்குவது தான் சிறந்ததாக இருக்கும் என்று முடிவு செய்து ஐரோப்பா செல்ல முடிவெடுத்துள்ளனர்.

தற்போது துபாய் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கீர்த்தி இயக்குனர் வெங்கி அட்லூரியை குடையால் அடிப்பதைப்போன்ற ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. இதில் கீர்த்தி இயக்குனர் ஏதோ கிண்டல் செய்ததால் தன்னிடம் இருந்த குடையால் அவர் சிரித்தபடி இயக்குனரை தாக்குகிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Related Posts

Leave a Comment