ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு: அரசியலுக்கு வந்துவிட்டார் ரஜினி.!

by Web Team
0 comment

மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அரசியலுக்கு வருவது உறுதி என அறிவித்த ரஜினி கட்சி தொடங்குவது பற்றி தெளிவாக முடிவை அறிவிக்காமலே இருந்து வந்தார்.

நாடாளுமன்ற தேர்தலின்போது சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு என அறிவித்திருந்தார்.

ஆனால் கொரோனா முடக்கத்தால் கட்சி தொடங்குவது தள்ளிப்போவதாக சொல்லப்பட்டு வந்தது. சில வாரங்களுக்கு முன்பு ரஜினி வெளியிட்ட அறிக்கை ரஜினி அரசியலுக்கு வருவாரா என்கிற கேள்வியை மீண்டும் எழுப்பிவிட்டது.

கொரோனா சமயத்தில் தன்னுடைய உடல்நிலை பாதிக்கப்படும் என மருத்துவர்கள் எச்சரித்ததாக ரஜினி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த நவம்பர் 30-ம் தேதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார் ரஜினி. அதன்பிறகு அரசியல் பிரவேசம் குறித்து விரைவில் அறிவிப்பேன் என்றும் தெரிவித்திருந்தார்.

தற்போது ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர் 31-ல் தேதி அறிவிப்பு #மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம் #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல என ட்வீட் செய்திருக்கிறார். எனவே தான் அரசியலுக்கு வருவதை இதன் மூலம் உறுதி செய்துவிட்டார் ரஜினி.

மேலும் அதில், “வரப்போகிற சட்டமன்ற தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றிபெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மீக அரசியலை உருவாக்குவது நிச்சயம். அற்புதம்… அதிசயம்… நிகழும் !!!” என்றுள்ளார்.

Related Posts

Leave a Comment