சூனியத்தை எடுப்பதாக கூறி பெண்ணுக்கு கண்ட இடத்தில் சூடு வைத்து சாமியாரின் கொடூரச் செயல்

by Web Team
0 comment

சூனியம் இருப்பதாக கூறி போலி பெண் சாமியார் ஒருவர் பெண்ணின் உடல் முழுவதும் சூடான கம்பியால் குத்திய கொடூரம் ராஜஸ்தானில் நடந்திருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டம் பில்வாராவில் 40 வயது பெண் ஒருவருக்கு குடும்ப கஷ்டம் இருந்திருக்கிறது. இதனையடுத்து அந்தப் பெண் அந்த ஊரில் சூனியம் எடுப்பதாக கூறிக்கொண்டிருந்த பெண் ஒருவரிடம் தனது வேதனைகளை கூறியிருக்கிறார்.

குறைகளை கேட்ட போலி பெண் சாமியார் சந்தோஷி தேவி அப்பெண்ணுக்கு யாரோ சூனியம் வைத்திருப்பதாக கூறி, சூனியத்தை எடுக்க 1000 ரூபாய் ஆகுமென்று வாங்கிக் கொண்டிருக்கிறார். சூனியத்தை எடுக்க மறுநாள் வர வேண்டும் என்று கூறி அந்த பெண்ணை அனுப்பியிருக்கிறார்.

அதன்படி அந்தப் பெண் மறுநாள் தனது உறவினர்களுடன் சந்தோஷி தேவியிடம் சென்றிருக்கிறார். அப்போது அந்த பெண்ணை படுக்க வைத்த போலி சாமியார் பூஜைகள் என்ற பெயரில் பழுக்க காய்ச்சிய இரும்பு கம்பியை பெண்ணின் உடல் முழுவதும் குத்தியுள்ளார்.

அந்தப் பெண் வலியால் துடித்து கதறி சத்தம்போட்டுள்ளார். இது குறித்து அப்பெண்ணின் உறவினர்கள் போலீசிடம் புகார் தெரிவித்தனர்.

உடனே போலீசார் அங்கு விரைந்து அப்பெண்ணை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் போலி சாமியார்கள் மூன்று பேரை கைது செய்துள்ளனர்.

Related Posts

Leave a Comment