வாந்தி எடுத்த திமிங்கலம்: ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன மீனவர்

by Web Team
0 comment

தாய்லாந்து நாட்டை சேர்ந்த மீனவர் ஒருவர் திமிங்கலம் வாந்தி எடுத்ததால் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன அதிசய சம்பவம் நடந்துள்ளது.

உலகின் மிகப்பெரிய உயிரினமான திமிங்கலம் கடலில் வாழும் ஒரு உயிரினம். இந்த திமிங்கலம் தனது செரிமானத்திற்கு உதவும் ஒரு வகையான ஆசிடை கக்கிவிடும். அப்படி திமிங்கலம் வாந்தி எடுக்கும்போது பொருள் அம்பெர்கிரிஸ் என்று அழைக்கப்படுகிறது.

இதிலிருந்து வாசனையில்லாத ஆல்கஹால் இருப்பதாகவும், இதை வாசனைத் திரவியத்திற்கு பயன்படுத்தப்படுவதாகவும், இந்த வாசனை எத்தனை வருடங்கள் ஆனாலும் மாறாமல் இருக்கும் எனவுக் கூறப்படுகிறது.

இதனால் அதற்கு அதிகபடியான கிராக்கி இருந்துள்ளது. இருந்த போதும் அதன் அருமைப்பற்றி தெரியாத தாய்லாந்து நாட்டை சேர்ந்த நரிஸ் சுவாங் சாங் 100 கிமோ அம்பெர்கிரிஸ் என்ற அளவில் திமிங்கலத்தின் வாந்தியை அவர் சேகரித்து வைத்து வந்துள்ளார்.

அதன்பிறகு தனது நண்பர் மூலம் இதனை விற்ற அந்த மீனவர். சுமார் ரூ.25 கோடியை இதன் மூலம் சம்பாதித்து ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆனார்.

Related Posts

Leave a Comment