இந்திய அணிக்காக முதல் முறையாக விளையாடும் தமிழக வீரர் நடராஜனுக்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் வாழ்த்தியுள்ளனர்.
தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்.
இந்தியாவிற்கான தன் முதல் போட்டியிலேயே, சவால்கள் நிறைந்த சூழ்நிலையிலும் தன் முத்திரையைப் பதித்து, தன் சர்வதேசப் பயணத்தை வெற்றியுடன் துவக்கியிருக்கும் நம் மண்ணின் மைந்தன் நடராஜனுக்கு வெற்றிகள் மென்மேலும் வந்து சேர வாழ்த்துகிறேன். என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கான தன் முதல் போட்டியிலேயே, சவால்கள் நிறைந்த சூழ்நிலையிலும் தன் முத்திரையைப் பதித்து, தன் சர்வதேசப் பயணத்தை வெற்றியுடன் துவக்கியிருக்கும் நம் மண்ணின் மைந்தன் நடராஜனுக்கு வெற்றிகள் மென்மேலும் வந்து சேர வாழ்த்துகிறேன். @Natarajan_91 #AUSvsIND pic.twitter.com/tq8ScEWPSs
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) December 2, 2020
இதேபோல், தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
இந்திய – ஆஸ்திரிய கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக தனது முதல் வெற்றிப்பயணத்தை துவங்கியிருக்கும் தமிழக வீரர் திரு.நடராஜன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் எனவும்.
தனது அபாரத் திறமையால் தாய்நாட்டிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்க்கும் நடராஜன் அவர்களின் சாதனைப்பயணம் தொடரட்டும்” என்று தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வாழ்த்தியுள்ளார்.
#AUSvsIND கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக தனது முதல் வெற்றிப்பயணத்தை துவங்கியிருக்கும் தமிழக வீரர் திரு.நடராஜன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்! தனது அபாரத் திறமையால் தாய்நாட்டிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்க்கும் @Natarajan_91 அவர்களின் சாதனைப்பயணம் தொடரட்டும்! https://t.co/fO02onjG4e pic.twitter.com/pxSCilsO6P
— O Panneerselvam (@OfficeOfOPS) December 2, 2020