இலங்கையில் நடந்து வரும் இலங்கை பிரீமியர் லீக் தொடரில் ஆப்கானிஸ்தானின் இளம் வீரரை சீண்டிய அப்ரிடி அவர்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இலங்கையில் லங்கன் பிரீமியர் லீக் போட்டி தொடர் நடந்து வருகிறது. காலே கிளாடியேட்டர்ஸ்-கண்டி டஸ்கர்ஸ் அணிகள் மோதிய போட்டியின்போது கடும் மோதல் ஏற்பட்டது. இந்த ஆட்டத்தின் 18- வது ஓவரில் கிளாடியேட்டர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த பாகிஸ்தான் வீரர் முகமது அமீருக்கும், கண்டி டஸ்கர்ஸ் அணியில் இருந்த ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இளம் வீரரான நவீன் உல் ஹக்கிற்கும் இடையே மோதல் எற்பட்டது.
இந்த போட்டி முடிந்த பிறகு கிளாடியேட்டர்ஸ் அணியின் கேப்டன் அப்ரிடி அவர்கள் நவீன் உல்ஹக்கிடம் “மகனே நீ பிறப்பதற்கு முன்பாகவே நான் பேட் புடிச்சவன். கொஞ்சம் பாத்து நடந்துக்கோ” என பேசியது பெரும் சர்சையைக் கிளப்பியது. இதற்கு பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது,”இளம் வீரர்களுக்கு எனது அறிவுரை எளிதானது. இதனை யாரும் பெரிது படுத்த வேண்டாம். எங்களுக்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கும் நல்லுறவு உள்ளது. எதிரணி வீரர்களை மதிப்பது தான் போட்டியின் அடிப்படை” என தெரிவித்துள்ளார்.