நடராஜனுக்கு வாய்ப்பளியுங்கள்: டுவிட்டரில் குவியும் ஆதரவு

by Web Team
0 comment

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜனை களமிறக்குவது காலத்தின் கட்டாயம் என நடிகர் சதிஷ் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இழந்தது, இரண்டு போட்டிகளிலும் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் மிகச்சிறப்பாக பந்துவீசிய நடராஜன் சுற்றுப்பயண அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் இறுதி 11 பட்டியலில் இதுவரை தேர்ந்தெடுக்கப்படவில்லை.

எனவே வரும் போட்டியில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று தமிழக கிரிக்கெட் ரசிகர்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

ஸ்டார்ட் ஸ்போர்ட்ஸ் பக்கம், நடராஜனை அணியில் இணைப்பது பற்றிய கேள்விக்கு பலரும் ஆதரவாக பதிலளித்துவருகின்றனர்.

நடிகர் சதீஷ் “நிச்சயமாக அடுத்த ஆட்டத்தில் அவருக்கு வாய்ப்பளிக்கப் பட வேண்டும். திறமை மற்றும் காலத்தின் கட்டாயம்” என்று பதிலளித்துள்ளார்.

Related Posts

Leave a Comment