இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆதரவு

by Web Team
0 comment

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நாடு முழுவதும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

கடந்த வாரம் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியை நோக்கி பேரணி செல்ல இருப்பதாக அறிவித்தனர்.

இதன் தொடர்ச்சியாக டெல்லி நோக்கி சென்ற விவசாயிகள் மீது ஹரியாணா போலீஸ் தண்ணீரை செலுத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தாக்கியது.

இறுதியாக விவசாயிகள் டெல்லிக்குள் நுழைய மத்திய அரசு அனுமதித்தது. இதனைத் தொடர்ந்து விவசாயிகள் டெல்லியில் குளிரையும் பொருட்படுத்தாமல் போராடி வருகின்றனர்.

மத்திய அரசு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என அறிவித்துள்ளது. நேற்று சீக்கிய மத பண்டிகையான குரு நானக் ஜெயந்தி கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் இந்தியாவில் நடைபெற்றும் விவசாயிகளின் போராட்டத்திற்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆதரவு தெரிவித்துள்ளார்.

குரு நானக் ஜெயந்தி நிகழ்வு ஒன்றில் பேசிய ஜஸ்டின், “இந்தியாவிலும் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் எங்களுக்கு மிகவும் கவலையளிக்கிறது. அமைதி வழியிலான போராடும் உரிமைக்கு கனடா எப்போதுமே ஆதரவாக இருக்கும்.

இது தொடர்பாக இந்தியா அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளோம்” என்றார்.

கனடாவில் சீக்கியர்கள் கணிசமான எண்ணிக்கையில் வசிக்கின்றனர் என்பதும் கனடா அரசில் அமைச்சராகவும் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment