பிரித்தானியாவின் முதல் அபூர்வ தம்பதி: தந்தையே தாயான நிகழ்வு

by News Editor
0 comment

பிரித்தானியாவில், முதல் பாலின மாற்றம் செய்துகொண்ட தம்பதியர், இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

லண்டனைச் சேர்ந்த Hannah (32), ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறியவர். Jake Graf (41) பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறியவர். இருவரும் திருமணம் செய்துகொண்டபோது, அவர்களுக்கு குழந்தை வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.

Jake பெண்ணாக இருக்கும்போதே, தனது கரு முட்டைகளை சேகரித்து உறையவைத்து சேகரித்து வைத்திருந்தார்.

அவற்றை பயன்படுத்தி அவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள Laura என்ற வாடகைத்தாய் முன்வந்தார். ஏப்ரல் மாதம் அவர் Millie என்ற பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

அதாவது இப்போது தந்தை ஸ்தானத்தில் இருப்பவரே, தாயாக தனது கருமுட்டைகளை பயன்படுத்தியுள்ளார்.

தம்பதியரின் குழந்தை ஆசை நிறைவேறிய நிலையில், மீண்டும் வாடகைத்தாயாக முன்வந்துள்ளார் Laura.

ஆக, இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளனர் பிரித்தானியாவின் இந்த முதல் அபூர்வ தம்பதியர்.

Related Posts

Leave a Comment