தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் தளபதி விஜய். இவர் சமீபகாலமாக நடிகர் விஜய் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறார்.
நடிகர் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் பெயரில் கட்சியை தொடங்குவதாக அறிவிப்பு வெளியானபோது அதனை மறுத்து தொடங்குவதாக விஜய் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
இந்த பிரச்சனை தொடர்ந்து விஜய் அவரது தந்தையுடன் பேசுவது இல்லை என்று விஜய்யின் அம்மாவான ஷோபா தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், தனது மனைவி சங்கீதாவின் உறவினர்கள் மூலமாக 15 வருடங்களுக்கு முன்னர் இலங்கை , கொழும்பு நகரில் வாங்கிய தனது சொத்தை சிங்கள முதலாளிகள் சிலர் கைப்பற்ற சொத்தை நடிகர் விஜய் புகார் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா ஈழத் தமிழர் குடும்பத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.