விஜய்சேதுபதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் இடையே ரகசிய உறவா?.. சர்ச்சையை கிளப்பிய நடிகர்

by News Editor
0 comment

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் உச்ச நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என மற்ற மொழிகளிலும் சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்தி படத்திலும் விரைவில் நடிக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

இதையடுத்து, விஜய்சேதுபதியுடன் பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஸுடன் பிரபலம் ஒருவர் இணைந்து பேசியுள்ளது பலருக்கும் சங்கடத்தை கொடுத்துள்ளது.

இவர்கள் இருவரும் இணைந்து பல படங்களில் தொடர்ச்சியாக நடித்தனர். அது மட்டுமில்லாமல் ஒரு நடிகர் மற்றும் நடிகை தொடர்ந்து சில படங்களில் நடித்தால் அவர்கள் மீது கிசுகிசு வருவது சகஜம்.

அந்த வகையில் தான் விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் விவகாரத்தில் நடந்துள்ளது.

ஆனால், பிரபல பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன், சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நெருங்கி பழகி வந்தனர் எனவும், அது விஜய் சேதுபதி குடும்பத்தில் சிறு குழப்பத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஏற்கனவே விஷால் மற்றும் லட்சுமிமேனனை பற்றி பேசியிருந்தார். இதனால் ரசிகர்கள் நாளுக்கு நாள் பயில்வான் ரங்கநாதனின் பேச்சு மோசமாகிக் கொண்டே செல்கிறது என அவரை எச்சரித்து வருகின்றனர்.

அவர் பேசும் கிசுகிசுக்களுக்கு நடிகர் நடிகைகளும் எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருப்பதால் ரசிகர்கள் அதை உண்மை என்பதை போலவே கருதுகின்றனர்.

இதைப்பற்றி, விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் கண்டிப்பார்களா? என இனி பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Posts

Leave a Comment