குறும்படம் போட்டு ஷாக் கொடுக்கும் பிக் பாஸ்

by Lifestyle Editor
0 comment

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் குறும்படம் ஒளிபரப்பாக உள்ளது பிக் பாஸ் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 56 ஆவது நாளான இன்று கமல் ஹாசனின் விஜயம் கிடைக்கிறது. கடந்த 3 சீசன்கள் போல இல்லாமல் இந்த சீசன் மிகவும் வெறுப்பாக செல்கிறது என்பது பிக் பாஸ் ரசிகர்களின் கருத்து. அத்துடன் 56 நாட்கள் கடந்த பின்னும் எப்படி விளையாட வேண்டும் என்பதை வார வாரம் கமல் டிப்ஸ் என்ற பெயரில் சொல்லி விட்டு சென்றாலும் ஆரம்பித்த இடத்திலேயே தான் அனைவரும் உள்ளனர். அந்த வகையில் வொர்ஸ்ட் பர்பாமன்ஸ் என்ற லிஸ்டில் மொத்த ஹவுஸ்மேட்ஸும் நாமினேட் ஆகும் அளவுக்கு ஆமை வேகத்தில் செல்கிறது ஷோ.

அதை சரி செய்யும் வேலையை ஹவுஸ்மேட்ஸ் செய்ய தவறுவதால் அதை பிக் பாஸ் தனது கையில் எடுத்துள்ளார். கடந்த சில நாட்களாக கொளுத்தி போடும் அவர், ரசிகர்களை உற்சாகமூட்ட, குறும்படம் இரண்டை இந்த வாரம் பார்சல் தந்துள்ளார்.

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், சம்யுக்தா இந்த ஷோல வளர்ப்பு என்கிற வார்த்தையை எத்தனை முறை பயன்படுத்துனீங்க என்று கமல் கேட்க சம்யுக்தா நிறைய முறை சார் என்று சொல்கிறார். தனது தாய்மையை குறித்து ஆரி பேசியதாக சம்யுக்தா சொல்ல,எ அவர் தவறாக சொல்லவில்லை வேணும்னா குறும்படம் ஒன்னு பார்க்கலாமா? என்று சொல்ல குறும்படம் ஒளிபரப்பாகும் படியாக ப்ரோமோ வீடியோ முடிகிறது

Related Posts

Leave a Comment