கடல்வீரர்கள் 3ம் ஆண்டு நினைவு தினம்

by Lifestyle Editor
0 comment

29.11.2017 இரவில் வீசிய அந்த ஒக்கி புயலின் தாக்கத்தில் இருந்து இன்னமும் மீளவில்லை கன்னியாகுமரி. 172 உயிர்களை காவு வாங்கிய அந்த சோகத்தில் இருந்து இன்னமும் தவித்துக்கொண்டிருக்கிறார்கள் உறவினர்கள்.

புயல் எச்சரிக்கை தெரியாமலேயே ஆழ் கடலில் சிக்கிக்கொண்டு கரை திரும்ப முடியாமல் புயலோடு போராடி உயிரிழந்தார்கள் மீனவர்கள்.

இயற்கையின் சீற்றத்தோடு போராடி உயிரிழந்த மீனவர்களை கடல் வீரர்கள் என்று அவர்களது உறவினர்கள் வணங்கி வருகின்றனர்.

மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை இன்று கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் கடல்வீரர்கள் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

புயல் எச்சரிக்கை தெரியாமல் இனி ஒரு உயிர் கூட போகக்கூடாது என்பதற்காக, இனி வரும் காலங்களிலாவது மீனவர்களுக்கு தரையிலுந்து உடனுக்குடன் தகவல் கிடைக்க ஏதுவாக ரேடியோ போன் மற்றும் கடல் ஆம்புலன்ஸ் வசதி செய்து தர அரசுக்கு கோர்க்கை விடுத்தனர்.

Related Posts

Leave a Comment