மாஸ்டர் திரைப்படம் எப்போது வெளியாகிறது தெரியுமா?

by Lifestyle Editor
0 comment

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர், இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தீபாவளி அன்று மாலை 6 மணிக்கு மாஸ்டர் திரைப்படத்தின் டீசர், வெளியாகி யூடியூபில் மிக பெரிய சாதனை படைத்து வருகிறது.

மாஸ்டர் திரைப்படம் எப்போது வெளியாகும் என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர், மேலும் இப்படம் பிரபல OTT தளத்தில் வெளியாகும் என ஒரு தகவல் இணையத்தில் பரவி வந்தது.

ஆனால் மாஸ்டர் படக்குழு தரப்பில் இதனை மறுத்தது மட்டுமின்றி, மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் தான் வெளியாகும் என உறுதி அளித்தனர்.

இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 13 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் விஜய் ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்தில் உள்ளனர்.

Related Posts

Leave a Comment