நெஞ்செலும்பு முருங்கைக்காய் சாம்பார்

by Lifestyle Editor
0 comment

தேவையான பொருட்கள்:

எலும்பு – 250 கி
முருங்கைக்காய் – 1
து.பருப்பு – 50 கி
வெங்காயம்– 1
இஞ்சி – பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி
தக்காளி – 2
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
தனியா தூள் – 4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி
புளித் தண்ணீர் – 2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

அரைத்துக் கொள்ள:

தேங்காய் – 2 மேசைக்கரண்டி
கசகசா – 1 தேக்கரண்டி
மிளகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி

தாளிக்க:

பிரியாணி இலை – 1
பட்டை – சிறிய துண்டு
கல் பாசி – சிறிது
சோம்பு – 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 2
கறிவேப்பிலை – 1 கொத்து
நல்லெண்ணெய் – 2 மேசைக்கரண்டி

செய்முறை:

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

முருங்கைக்காயை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

எலும்பை நன்றாகக் கழுவி குக்கரில் போட்டு து.பருப்பு, உப்பு, மஞ்சள்தூள் மற்றும் 2 கப் தண்ணீர் சேர்த்து 3 விசில் விட்டு 5 நிமிடங்கள் சிம்மில் வேக வைக்கவும்.

கடாயில் நல்லெண்ணெய் விட்டு, தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொரிய விடவும்.

பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

பின் , தக்காளியைச் சேர்த்து கூழாகும் வரை வதக்கவும்.

பிறகு, குக்கரில் உள்ள பொருட்களைச் சேர்க்கவும்.

பின் மசாலா தூள் அனைத்தையும் சேர்த்து , முருங்கைக்காய், தேவையான உப்பு சேர்த்துக் கலந்து கொதிக்க வைக்கவும்.

புளித் தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும் தேங்காய் விழுதைச் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.

சுவையான, மணம் மிகுந்த செட்டிநாடு நெஞ்செலும்பு முருங்கைக்காய் சாம்பார் சாப்பிட தயார்.

Related Posts

Leave a Comment