ராகு கால பூஜை செய்வது எப்படி?

by Lifestyle Editor
0 comment

துர்க்கை அம்மன் வழிபாடு என்றாலே, செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் வழிபட வேண்டும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. இந்த செவ்வாய்க்கிழமையில் துர்க்கை அம்மனை ராகு காலத்தில் வழிபாடு செய்தால் திருமணத்தடை விலகும். கணவன் மனைவி பிரச்சனை நீங்கும். தீராத கடன் தீரும். வாழ்க்கையில் உள்ள வறுமை நீங்கி, செல்வ வளம் பெறலாம். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ராகு திசை, ராகு தோஷம் உள்ளவர்களுக்கு அதன்மூலம் உண்டாகக்கூடிய பிரச்சனைகள் குறையும்.

அடுத்தபடியாக வெள்ளிக்கிழமை ராகுகால நேரத்தில் துர்க்கை அம்மனை வழிபட்டு வந்தோமேயால் குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே உள்ள சண்டை சச்சரவுகள் நீங்கி, ஒற்றுமையான சூழல் நிலவும். குடும்பம், சண்டை சச்சரவு இல்லாமல் ஒற்றுமையாக இருந்து விட்டாலே, வாழ்வில் பெரிய நிம்மதி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கையில் இருக்கும் சேமிப்பு உயரத் தொடங்கும். அந்த மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்.

ஞாயிற்றுக்கிழமை அன்று ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபட்டுமேயானால், தீராத நோய் தீரும். வெளிநாட்டில் வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு விரைவாக விசா கிடைக்க, சீக்கிரமே வெளிநாட்டில் வேலை கிடைக்க, வெளிநாட்டில் இருக்கும் தங்களுடைய உறவினர்களின் குடும்பம், அதாவது இன்றைய சூழலில், தாய் தந்தையரை பிழிந்துவிட்டு நிறைய பேர் வெளிநாடுகளில் வசித்து வருகிறார்கள். அவர்களுடைய நலனுக்காக துர்க்கையம்மனை ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகால நேரத்தில் வழிபாடு செய்யலாம்.

குறிப்பாக உங்களுக்கு இருக்கக்கூடிய எதிரிகள் தொல்லை நீங்க வேண்டும் என்பதற்காக இந்த ஞாயிற்றுக்கிழமையில் ராகுகால நேரத்தில் வழிபாடு செய்யலாம். வேலை செய்யும் இடத்தில் நம்மை முன்னேற விடாமல் தடுக்கும், நம்முடைய மேலதிகாரிகளின் தொல்லை நீங்கவும் இந்த வழிபாடு மிக மிக சிறப்பானது.

இறுதியாக வளர்பிறை அஷ்டமி தினத்தன்று, வரக்கூடிய ராகு கால நேரத்தில் துர்க்கையம்மனை வழிபாடு செய்வதால், சகல சௌபாக்கியத்தையும் நமக்கு பெற்றுத் தந்து, நிம்மதியான சுகபோக வாழ்க்கையை வாழ, சகல ஐஸ்வர்யமும் நமக்கு வந்து சேரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Related Posts

Leave a Comment