ஓசூரில் போலி மருத்துவர் கைது

by Lifestyle Editor
0 comment

கிருஷ்ணகிரி

ஓசூர் அருகே மருத்துவம் படிக்காமல், நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவரை, போலீசார் கைதுசெய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கொத்தக்கொண்டப்பள்ளியை சேர்ந்தவர் பிரசாத். பட்டப்படிப்பு வரை படித்துள்ள அவர், அதே பகுதியில் மெடிக்கல் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் பிரசாத், நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பதாக மருந்து கட்டுப்பாட்டு துறையினருக்கு புகார் வந்தது.

அதன்பேரில், ஆய்வாளர் ராஜுவ்காந்தி தலைமையிலான மருத்துவக்குழு நடத்திய திடீர் சோதனையில், பிரசாத் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைதுசெய்த போலீசார், அவரது மருத்துவமனை மற்றும் மெடிக்கலுக்கு சீல் வைத்துள்ளனர்.

Related Posts

Leave a Comment