வலிமை படத்தின் சண்டை காட்சியில் தல அஜித் செய்யும் புதிய விஷயம்

by Lifestyle Editor
0 comment

தல அஜித் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர், இவருக்கு தமிழகம் முழுவதிலும் அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர்.

அந்த வகையில் சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிய வசூல் செய்து சாதனை படைத்தது.

மேலும் தற்போது இவர் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் தல அஜித் வலிமை திரைப்படத்தில் பைக் வீலிங் செய்யும் காட்சியின் புகைப்படம் வெளியாகி இணையத்தில் தீயாய் பரவியது.

இந்நிலையில் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக தல அஜித் நடிக்கின்றார். அப்படத்தில் வழக்கமான சண்டை காட்சிகள் போல் இல்லாமல், போலீஸ் அடிமுறைகளை வைத்து சண்டை காட்சியில் நடித்துள்ளார்.

இதற்காக அஜித் தனது நண்பரான உயர் போலீஸ் அதிகாரியிடம் பயிற்சி எடுத்து மாறுபட்ட ஆக்ஷனை வெளிப்படுத்தியுள்ளார் தல அஜித்.

Related Posts

Leave a Comment