பிக்பாஸ் 55-ம் நாள்

by Lifestyle Editor
0 comment

கமல் வரும் சனிக்கிழமை எப்பிசோட். இந்த வாரத்தில் ஏராளமான சண்டைகள்… பஞ்சாயத்துகள்… குழப்பங்கள் என நிறைந்திருந்தன. பலருமே கிளாஸ் மிஸ்கிட்ட மாட்டிவிடும் மனநிலையோடு கமல் வருகைக்காகக் காத்திருந்தார்கள். ஆனால், பல பஞ்சாயத்துகளை கமல் விசாரிப்பது லைட்டாகத்தான் இருக்கும். வேற பேச்சுகள் அதிகம் இருக்கும். அதனால், பல நேரங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இப்ப இந்த பஞ்சாயத்து முடிஞ்சுதுதா.. இல்லையா… என்ற குழப்பம் நீடிக்கவே செய்யும். அதுதான் தமிழ் பிக்பாஸின் பலம். சில நேரங்களில் பலவீனமும்கூட. நேற்றைய பஞ்சாயத்து விசாரணைகள் எப்படிப் போனது? கட்டுரையில் பார்க்கலாம்.

வெள்ளிக்கிழமை எப்பிசோட்

மிகச் சுருக்கமாகக் காட்டப்படும் நாள் வெள்ளிக்கிழமைதான், கிட்டத்தட்ட ட்ரைலர் போலத்தான் இருக்கும். அதில், ரம்யாவின் ரோல் பற்றிய ஆரியின் உரையாடல். அதாவது பாலா குரூப்தானாம் ரம்யா. அந்தக் குரூப் கேட்க வேண்டிய கேள்விகளை ரம்யா வந்து கேட்கிறாராம்.

ஆரி – ரியோ கேப்டன் பஞ்சாயத்தில் ரம்யா மடக்கி கேள்வி கேட்டதிலிருந்தே ரம்யா மேல் காண்டாக இருக்கிறார் ரம்யா. அதனால், சுற்றி வளைத்து ரம்யாவை பாலா கேங்கில் தள்ள பார்க்கிறார். ஆரி சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை. ரம்யாவும் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்துகளில் மட்டும் கொதிக்கிறார் என்பதும் உண்மைதான். சம்யுக்தா, பாலா, அனிதா போன்றவர்களின் பஞ்சாயத்துகளில் அதிகம் தலையிடுவதில்லை. ஆனால், பாலாவைப்போல அர்ச்சனா அண்ட் கோவை குறி வைத்து தாக்கும் நோக்கம் இருப்பதுபோல தெரியவில்லை. சுருக்கமாகச் சொன்னால், ரம்யா எனும் வக்கீலை பாலா குரூப் தேவையான இடத்தில் பயன்படுத்திக்கொள்கிறது.

’தூங்கிட்டு இருக்கேன் சத்தம் போட்டு பேசாதீங்க’னு ஷனம் அணத்தினார். ‘பகலில் தூங்குவதே தவறு. இதில் குறட்ட வேறா?’என புலிகேசி வடிவேலாட்டாம் கிண்டல் பண்ணிட்டு இருந்தார்கள்.

அனிதா பதுங்கி தாக்குதல் உத்தியை நேற்றும் தொடர்ந்தார். கேப்டன் உள்ளிட்ட பல பஞ்சாயத்துகள் அடுத்த நாள் பஞ்சாயத்தில் வரும் என கேபியிடம் சொல்லிட்டு இருந்தார். ’கேப்டனே ஜெயிலுக்குப் போறாரு’னு பாலா கொக்கரித்தார். எக்கோ சவுண்ட் கொடுத்தார் ஷிவானி. இந்த சீசனில் சுவாரஸ்யமே இல்லாத பர்ஃபார்மர் என்றால் ஷிவானிதான்.

சனிக்கிழமை

புயல் சேத பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்து ஆரம்பித்தார் கமல். மய்யம் கொண்ட புயல் என்று பேச்சைத் தொடங்கியது போது… அது அரசியல் பன்ச் இல்ல… விளம்பரம்னு தோனுச்சு.

எவிக்‌ஷனிலிருந்து விடுவிக்கும் பர்பிள் கார்டு விவாதம் பற்றி விசாரித்தார் கமல். ‘ரசிகர்களிடம் போய்ட்டு வரலாம்னு விட்டுகொடுத்தேன்’ – இதுபாலா. ‘கேள்வி மேல கேள்வி கேட்டுட்டே இருந்தாங்க’ இது ஜித்தன் ரமேஷ். இப்படி ஒவொவொருவராக விட்டுக்கொடுத்ததைப் பற்றி பேசிட்டே வந்தாங்க.

‘ஏன் மக்களைச் சந்திக்க பயப்படறீங்கன்னு நிஷாவை ஆரி உசுப்பேத்தினது அனிதாவுக்கு அந்த கார்டு போகக்கூட இருக்கலாம்னு அப்ப தோனல. இப்போ தோணுது.

நல்லா விளையாண்டீங்கன்னு ஷனமைப் பாராட்டினார் கமல். ‘அந்த கேம்ப்ல எல்லோருமே வேணாம்னு சொல்லிட்டாங்க. வேணும்னு சொன்னது நான் மட்டும்தான் லாஜிக்கா எனக்குத்தான் கிடைச்சிருக்கணும்னு ஒரு ரூட்டைப் பிடிச்சு ஷனம் பேசிட்டு இருந்தார். இந்த வாரம் முழுக்கவே கருத்து சொல்றேன்னு கருத்து சொல்றேன்னு நிறைய ஷனம் பேசறாங்க… இதுவே அவங்களுக்கு எதிரா போய்டும் என்றே தோனுது. ஏன்னா, சில வார்த்தைகளை லூஸ் பண்ணிடுறாங்க.

’ரியோவுக்கு ரொம்ப சப்போர்ட் பண்றீங்க. நீங்க உங்க கேமை விளையாடுங்க’னு நிஷாவுக்கு நூறாவது முறையாக டிப் தந்தார் ஆண்டவர். சுவாரஸ்யமான போட்டியாளர் சாய்ஸ்க்குக்கூட குரூப் பாலிடிக்ஸ் நடக்குதுன்னு ஷனம் நிஷாவைக் கோர்த்துவிட்டார். நிஷா பட்டிமன்றங்களில் வாதம் செய்யும் திறமை நிஜத்தில் இல்லை. சட்டென்று எமோஷனாகி விடுகிறார் தவிர, வாதங்களை எடுத்து வைப்பதில்லை.

இதுதான் டைம் என ஆரி, ப்ளாஸ் பேக்கை எல்லாம் ஓட்டி, நிஷா மீது குறைகளை அடுக்கினார். கமலுக்கே கொட்டாவி வந்துட்டு இருந்துச்சு. எல்லாத்தையும் கேட்டுட்டு, நிஷாவைத் திட்டுவார்ன்னு ஆரி நினைச்சிட்டு இருக்க, ‘பழங்கதையிலிருந்து வெளியே வாங்க’னு ஆரிக்கு அட்வைஸ் பண்ண அவர் ஜெர்க்கானார்.

பிரேக்கில் பாலா – அர்ச்சனா – நிஷா சுமுகமாகப் பேசிக்கொண்டார்கள். நிஷாவுக்குள் ஏதோ ஒரு மாற்றம் நடந்திருக்கு. அநேகமாக இந்த வாரத்தில் அது வெளிப்படலாம்.

கால் செண்டர் டாஸ்க் பற்றி பேச்சை ஆரம்பித்தார் கமல். பாலாவைப் பாராட்டினார். அர்ச்சனாவை ‘ஏன் பாலாவைச் செலக்ட் செய்தீர்கள் என விசாரித்தார். ’குரூப் பாலிடிக்ஸ் பற்றி பேசிட்டே இருப்பதை விசாரிக்க என்றார் அர்ச்சனா. பெரிய சுவாரஸ்யம் இல்லை.

‘அர்ச்சனா அண்ட் கோ குரூப் பாலிடிக்ஸ் செய்வதால் மற்றவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். கேம் இம்பேலன்ஸாக போயிடும்னு கவலை படறேன்’னு சொன்னார் பாலா. கேபி ‘இதையேத்தான் பாலாவும் செய்யறான். சம்யுக்தா, ஷிவானியை அவன் நாமினேஷனே பண்றது இல்லை’னு ஷார்ட்டா, ஷார்ப்பா அடிச்சார் கேபி. அதுதான் நேற்றைய எப்பிசோட்டின் திருப்புமுனை. இதை நேரடியா எப்படிச் சொல்றதுன்னு அர்ச்சனா தயங்கிட்டு இருந்தார். ஏன்னா, சம்யுக்தாவோடு நல்ல உறவு அர்ச்சனாவுக்கு இருந்தது.

தம் மீது பாய்ந்த அம்பை என்ன செய்வது என திணறினார். ஏன்னா, ஆரி சொன்னதுபோல காதல் பாலா கண்களை மறைக்கத்தான் செய்யுது. இந்தத் தாக்குதலை அவர் எதிர்பார்க்க வில்லை. ’அவங்க தப்பே பண்ணல’ என சொத்தையான வாதத்தை முன்வைக்க, அர்ச்சனா அண்ட் கோ சைலண்ட்டாக அதை கிண்டி விட்டார்கள். ஷிவானியை எல்லாம் எல்லா வாரமும் சுவாரஸ்யம் இல்லாத போட்டியாளர்ன்னு செலக்ட் பண்ணலாம். அப்படித்தா அவங்க பர்ஃபார்ம் இருக்கும். அதை ஒரு வாரமும் பாலா செய்தது இல்லை.

’நிஷாவை விட்டு ஏன் விலகுனீங்க’ என்று அனிதாவிடம் தாவினார் கமல். போனில் சொன்ன காரணத்தை ரிப்பிட் செய்தார் அனிதா. பாலா குருப், உதிரி குரூப் இரண்டுக்குமே டார்கெட் அர்ச்சனா குரூப்தான் போல.

கேப்டன் கேம்க்கு வந்தார் கமல். ‘விட்டுகொடுக்கல… ஆனா, போட்டியில சின்ன மீறல் இருந்துச்சு. அதால எனக்கு ஆர்வம் போய் விலகிட்டேன்’னு ஆரி விளக்கிச் சொன்னார். பாலா திரும்ப திரும்ப ஆரியை அதை வெச்சே கார்னர் செய்ய முயல, கமல் ‘பாலா செஞ்சது சோம் வெற்றியைத் தடுத்தது. ஆரி செஞ்சது ரியோவுக்கு விட்டுக்கொடுத்தது. அதனால இரண்டு வேற’என திருத்தினார். இது புரிய வேண்டியது ரம்யாவுக்குத்தான். அவர்தான் அன்றைக்கு இது ரொம்பவே முக்கியமான லா பாயிண்ட் என வாதிட்டு இருந்தார். அது சம்யுக்தா, பாலாவுக்கு ஆதரவாக மாறும் என்பதால் இருக்கலாம்.

ஒரு கட்டத்தில் ரியோ பேச கையைத் தூக்கினார். பாலாவுக்கு பேச நிறைய வாய்ப்பும் நேரமும் கொடுக்கும் கமல், ரியோவைக் கண்டுக்கொள்ள வில்லை.

லவ் பெட்டில் சண்டை போட்டா, நாமினேஷனில் வந்துடுலாம் என பாலா சொன்னதற்கு கடும் எதிர்ப்பு வந்தது. அப்போது ரியோ, “நாங்க குரூப் பாலிடிக்ஸ் பண்றோம்னு பண்றோம்னு எங்களை டேமேஜ் செய்யற வேலையை அவர் செய்யறார்னு’ சொன்னது முக்கியமான பாயிண்ட்.

ஆரி – பாலா பஞ்சாய்த்துகளை நீண்ட நேரம் விவாத்தித்தார் கமல். நமக்கே டயர்டாகி விட்டது. ஏன்னா, ஏற்கெனவே எப்பிசோட்களில் பார்த்த விஷயங்களையே திரும்ப திரும்ப பேசிட்டு இருந்தாங்க.

அமைதியாக இருந்த ஷிவானியை ரெண்டு வார்த்தைகள் பேச வைத்து கேட்டார் கமல். இல்லாட்டி இன்னிக்கும் குரூப் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்திருப்பார்.

ஒரு வழியாக ஆரி – பாலா எவிக்‌ஷனலிருந்து காப்பாற்றப்பட்டதைச் சொன்னார் கமல். அப்பாடா… இது அவர்கள் காப்பாற்றப்பட்டதற்கு அல்ல.. எப்பிசோட் நிறைவடைந்ததற்காக!

Related Posts

Leave a Comment