ஸ்டாலினை கைது செய்வாரா? எம்.பி. டி.ஆர்.பாலு ஆவேசம்!

by Lifestyle Editor
0 comment

ஸ்டாலினை கைது செய்ய முடியும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியதற்கு திமுக எம்.பி. டி.ஆர் பாலு கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஒரு பேட்டியின்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், அடையாறு கரை உடைந்ததாக தவறான தகவலை ஸ்டாலின் தெரிவித்தார். தவறான தகவலை பேரிடர் காலத்தில் பரப்பியதற்காக ஸ்டாலினை கைது செய்ய முடியும் என கூறியிருந்தார்.

இந்நிலையில் அமைச்சர் பாண்டியராஜனின் பேட்டிக்கு எதிர்வினையாற்றிய திமுக எம்.பி. டி.ஆர். பாலு, பாண்டியராஜன் என்றால் நடிகர் பாண்டியராஜனா? ஓ…கூவத்தூரில் காம்பவுண்டை எகிறி குதித்து வந்தவரா? என்று கிண்டல் செய்ததுடன், யார் யாரைக் கைது செய்வது என்ற விவஸ்தை இல்லாமல் போய்விட்டது . பாண்டியராஜன் எப்போது அரசியலுக்கு வந்தார்? எப்போது அமைச்சரானார்? ஆனால் எங்கள் தலைவர் எப்போது அரசியலுக்கு வந்தார் என்று எல்லோருக்கும் தெரியும். மக்கள் பார்த்திட்டு இருக்காங்க. அந்த அமைச்சருக்கு என்ன பைத்தியம் பிடித்து விட்டதா? பேப்பர், டிவி எல்லாம் பார்ப்பது இல்லையா? என்று கடுமையாக விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment