குடித்த கணவன் கோவத்தில் வெடித்து செஞ்ச வேலை…

by Lifestyle Editor
0 comment

தனது மனைவி குடிக்க பணம் கொடுக்காத கோவத்தில், அவரை கொன்று தலைமறைவான ஒரு கணவரை போலீசார் கைது செய்தார்கள்

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையின் பெல்லப்பூரில் 39 வயதான ராஜு மெஹ்ரா என்பவர் தனது மனைவி 35 வயது மனைவி ரத்னா மெஹ்ராவுடன் வசித்து வந்தார் .இந்நிலையில் ராஜுவுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. அதனால் தினமும் குடித்து விட்டு வந்து மனைவியுடன் சண்டையிட்டு வந்துள்ளார் .மேலும் அவரிடம் பணம் கேட்டும் ,உல்லாசத்திற்கு குடிபோதையில் கூப்பிட்டும் அவரை பலவிதமாக டார்ச்சர் செய்துள்ளார் .அதனால் அவரின் மனைவி அவரை குடிப்பழக்கத்திலிருந்து திருத்துவதற்காக அவருக்கு குடிக்க காசு கொடுக்காமல் இருந்தார் .

அதனால் மதுவுக்கு அடிமையான் அவரால் அந்த பழக்கத்தை நிறுத்த முடியாமல் அவதி பட்டார் .கடந்த மாதம் 25ம் தேதியன்று ராஜு தன்னுடைய மனைவியிடம் குடி போதையில் வந்தார். அப்போது அவரிடம் குடிப்பதற்க பணம் கேட்டு அவரை டார்ச்சர் செய்தார் .அதனால் அவரை கையை பிடித்து இழுத்து அடித்தார் மேலும் ராஜு ரத்னாவை சுத்தியலால் தாக்கினார். அப்போது அவர் தாக்கியதில் அவரின் மனைவி அங்கேயே மயங்கி விழுந்துள்ளார் .பின்னர் காயமுற்ற ரத்னா சியோன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் அக்டோபர் 31 அன்று இறந்தார்..

அதன் பிறகு ராஜு ஒரு மாதமாக தலைமறைவாக வாழ்ந்து வந்தார் .போலீசார் அவரின் போட்டோவை சமூக ஊடகத்தில் வெளியிட்டும் ,போஸ்டர் அடித்தும் தேடி வந்தார்கள் .ஆனால் ராஜு பழைய பேப்பர்களை பொறுக்கி மாறு வேடத்தில் இருந்து வந்தார் .கடந்த வாரம் அவர் இப்படி மாறுவேடத்திலிருப்பதை போலீசார் கண்டறிந்து அவரை கைது செய்து சிறையிலடைத்தார்கள் .

Related Posts

Leave a Comment