நிவர் புயல் வலுவிழந்துள்ளது

by Lankan Editor
0 comment

வங்கக்கடலில் உருவான நிவர் புயல் தற்போது புதுச்சேரி அருகே கரையை கடந்து வருகிறது. இந்த புயல் இன்னும் 3 முதல் 4 மணி நேரத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதுச்சேரியில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவிலும் புயல் தற்போது நிலைகொண்டுள்ளது.

இந்நிலையில், புயலின் தற்போதைய நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதில் தெரிவித்ததாவது , அதிதீவிர புயலாக இருந்த நிவர் புயல் தற்போது வலுவிழந்துள்ளது. வலுவிழந்ததையடுத்து நிவர் தற்போது தீவிர புயலாக மாறியுள்ளது.

நிவர் அதிதீவிர புயலில் இருந்து தீவிர புயலாக மாறியுள்ளதால் காற்றின் வேகம் வெகுவாக குறைந்துள்ளது.

Related Posts

Leave a Comment