உலக கால்பந்து ஜாம்பவான் மரடோனா காலமானார்

by Lankan Editor
0 comment

மிகச்சிறந்த வீரர்களில் ஒருவரான கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனா தனது 60 வயதில் காலமாகியுள்ளார்.

இம்மாதம் மூளை இரத்த உறைவு தொடர்பாக வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சையை செய்திருந்த அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1986 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை அர்ஜென்டினா வென்றெடுப்பதற்கு மரடோனா அந்த அணியின் தலைவராக இருந்து மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்தார்.

இந்நிலையில், உலக மக்களிடையே அவரது மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் அர்ஜென்டினா கால்பந்துச் சங்கம் தங்கள் வரலாற்று நாயகன் காலமானதற்கு ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.

மரடோனா, அர்ஜென்டினாவுக்காக 91 போட்டிகளில் விளையாடி 34 கோல்களை அடித்துள்ளார் என்பதுடன் நான்கு உலகக் கோப்பைகளில் ஆர்ஜென்டீனாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடியுள்ளார்.

Related Posts

Leave a Comment