யாழில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை – 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

by Lankan Editor
0 comment

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி இதனைத் தெரிவித்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் நேற்று 322 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவர்களில் நால்வருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களில், யாழ்ப்பாணத்தைத் தவிர கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவருக்கும் முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிக்கப்படும் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts

Leave a Comment