மலிங்காவுக்குப் பதில் இவரே கேப்டன் – இலங்கை LPL -ல் அதிரடி மாற்றம்

by News Editor
0 comment

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர்கள் அளித்த வரவேற்பு உலகமெங்கும், அதுபோல லீக் போட்டிகள் நடைபெற வழிவகுத்துவிட்டது. இலங்கையில் எல்.பி.எல் கிரிக்கெட் போட்டிகள், எட்டாண்டுகளாக நடத்தப்படுகிறது. ஐந்து அணிகளாகப் பிரிந்து ஆடப்படும் போட்டிகள் பெரும்பாலும் மாலை நேரத்தில் நடப்பதாகவே திட்டமிட்டப்படுகிறது.

இந்த அண்டு எல்.பி.எல் போட்டிகள் கொரோனா நோய்த் தொற்று பரவல் அதிகமாக இருந்ததால் பல முறை ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது நவம்பர் 26 -ம் தேதி தொடங்கும் எல்.பி.எல் தொடரில் டிசம்பர் 10-ம் தேதி வரை லீக் போட்டிகளும், டிசம்பர் 13 மற்றும் 14 -ம் தேதிகளில் அரையிறுதிப் போட்டிகளும், டிசம்பர் 18-ம் தேதி இறுதிப் போட்டியும் நடைபெற விருக்கிறன.

இந்நிலையில் பல வீரர்கள் பலவித காரணங்களால் எல்.பி.எல் போட்டியிருந்து விலகி வருகிறார்கள். அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெயில் தனிப்பட்ட காரணங்களால் எல்.பி.எல் போட்டியிலிந்து விலகினார். அவர் கண்டி அணிக்காக விளையாட தேர்வாகியிருந்தார். அதேபோல, அதே அணியில் ஆட இருந்த பாகிஸ்தான் வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதால் அவர் ஆடுவாரா என்பது சந்தேகம்தான். அதேபோல பாகிஸ்தானின் சயித் அப்ரிடி சில காரணங்களால் தாமதமாக எல்.பி.எல் தொடரில் இணைவார் என்று தெரிகிறது.

இந்நிலையில் எல்.பி.எல் அணிகளில் முக்கிய அணியான கோல் கிளாடியேட்டர்ஸிலும் ஒரு அதிரடி மாற்றம் நடந்துள்ளது. அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டவர் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா. ஆனால், அவர் தற்போது இந்த எல்.பி.எல் தொடரில் விளையாடப் போவதில்லை எனும் முடிவை எடுத்துடுள்ளார். ஏற்கெனவே, இதேபோல ஐபிஎல் போட்டியிருந்தும் விலகினார்.

இதனால் கோல் கிளாடியேட்டர்ஸ் அணி நிர்வாகம், ஓப்பனிங் வீரர் தனுஷ்க குணதிலகவை கேப்டனாக நியமித்துள்ளது. இது அந்த அணிக்குப் பலமா.. பலவீனமா என்பது ஓரிரு போட்டிகளின் முடிவுகளே தெரிவிக்கும்.

Related Posts

Leave a Comment