பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 55 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழப்பு

by Lankan Editor
0 comment

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப் பட்ட நாடுகள் வரிசையில் பிரித்தானியா 7 வது நாடாக விளங்குகிறது.

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை காலமும் 55 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மையில் வெளியான உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி 55 ஆயிரத்து 24பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

மேலும் கொரோனா வைரஸ் தொற்றினால் ,15இலட்சத்து 12ஆயிரத்து 45பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 18ஆயிரத்து 662பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 398பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் மருத்துவமனைகளில் வைரஸ் தொற்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள ஆயிரத்து 421பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

Related Posts

Leave a Comment