மகாராஷ்டி மாநிலம் ஷஹாபூர் வனப்பகுதியில் மூன்று இளைஞர்கள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணையில் இரண்டு நாட்கள் கழித்து அவர்களுடைய மரணம் குறித்த அதிர்ச்சித் தகவல் வெளியாகின.
நிதின் பெரே, மஹேந்திர துபேல், முகேஷ் தவத் என்னும் கர்தி கிராமத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் அமாவாசை தினத்தன்று மோட்சம் அடையப்போவதாக நம்பி, நிர்வாண நிலை என்னும் மோட்சம் அடைய அந்த இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், இறந்த மூவருடன், நான்காவதாக ஒரு நபரும் தற்கொலைக்காக திட்டமிட்டிருந்தது கடைசி நேரத்தில் முடிவினை மாற்றிக்கொண்டிருக்கிறார்.
தற்கொலைக்கு முன்பாக மூவரும் மரத்துக்கு கீழ் அமர்ந்து மது அருந்திவிட்டு, புடவைகளைக்கொண்டு தூக்கிட்டு உயிரிழந்திருக்கின்றனர். இந்த மரணங்களில் சந்தேகப்படும்படியான விஷயங்கள் அனைத்தும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என்றார்.