திருமணம் ஏற்பட்டால் மனமுடைந்த தோழிகள் எடுத்த விபரீத முடிவு; விசாரணையி காத்திருந்த அதிர்ச்சி!

by News Editor
0 comment

கேரளாவை சேர்ந்த இரண்டு கல்லூரி மாணவிகள் அமிர்தா மற்றும் ஆர்யா. 21 வயதாகும் இவர்கள் இரண்டு பேரும் எப்போதும் ஒன்றாகவே இணைபிரியாத நண்பர்களாக இருந்துள்ளனர்.

இதனையடுத்து, அமிர்தாவுக்கு அவரது வீட்டில் திருமண ஏற்பாடு செய்ய ஆரம்பித்த போது என்னால் ஆர்யாவை பிரிந்து இருக்க முடியாது எனவும், திருமணம் வேண்டாம் என சொல்லியுள்ளார். ஆனால் இதை அவரது குடும்பத்தினர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

இந்த நிலையில், திருமண ஏற்பாடு பற்றி ஆர்யாவிடம் சொல்லியுள்ளார் அமிர்தா. அதனால், அவர் எப்படியும் எனக்கும் திருமணம் செய்து வைத்து நம்மைப் பிரித்து வைத்துவிடுவார்கள். அதனால் தற்கொலை செய்துகொள்ளலாம் என சொல்லியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து கடந்த தீபாவளிக்கு முன்பதாக இருவரும் வெளியில் சென்று வருவதாக வீட்டில் கூறிச் சென்றுள்ளனர். ஆனால் அன்று இரவு ஏழு மணி ஆகியும் இருவரும் வீட்டுக்கு வராததால் அவர்களை தேடிபார்த்து கிடைக்காததால் போலிஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில், மூவாற்றுப்புழா ஆற்றங்கரையில் அவர்களின் சடலங்களை போலிஸார் கண்டெடுத்துள்ளனர்.

மேலும், விசாரணையில் பாலத்தில் நின்று கை கோர்த்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

இதனால், தோழிகள் இருவரும் ஓரினச்சேர்க்கையாளர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Related Posts

Leave a Comment