உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் எண்ணிக்கை 5 கோடியைக் கடந்தது!

by Lankan Editor
0 comment

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை 5.89 கோடியைத் தாண்டியுள்ளது.

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் தாக்குத்திறன் இன்னும் குறையவில்லை.

இந்நிலையில் உலகம் முழுவதிலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5.89 கோடியைக் கடந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4.07 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

மேலும் கொரோனா வைரஸ் தொற்று நோயால் இதுவரை 13.93 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 1.68 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1.03 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

Related Posts

Leave a Comment