நாட்டில் 20 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்றாளர்கள்

by Lankan Editor
0 comment

நாட்டில் நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) அடையாளம் காணப்பட்ட 400 கொரோனா தொற்று நோயாளிகள் தொடர்பான அறிவிப்பினை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும், நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 121 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் 112 பேர் கம்பஹாவை சேர்ந்தவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, 27 பேர் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், 09 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என்றும் அதில் 4 பேர் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இருந்தும் 3 பேர் கட்டாரில் இருந்தும் சீனா மற்றும் ரஷ்யாவில் இருந்து தலா ஒருவரும் அடங்குகின்றனர்.

இந்நிலையில் நாட்டில் இதுவரை கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்து 171 ஆக உயர்ந்துள்ளது.

இதில் 14 ஆயிரத்து 69 பேர் குணமடைந்துள்ளதுடன் 6 ஆயிரத்து 15 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 87 பேர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment