சமீபகாலமாக சினிமா நடிகைகள் சிலர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டனர். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை சம்பவத்தின் பின்னணியில் காதலி ரியா மற்றும் ரியாவின் சகோதரர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவத்திற்கு பின்னர் திரையுலகில் போதை பொருள் புழக்கம் குறித்த தகவல் வெடித்தது. பின் விசாரணை வலையில் அடுத்தடுத்து சிக்கிவந்தனர்.
இதில் தீபிகா படுகோன், ரகுல் பிரீத் சிங், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர் என முன்னணி நடிகைகளும் விசாரிக்கப்பட்டனர்.
கர்நாடகாவின் ராகினி திவேதி, சஞ்சனா கைது செய்யப்பட்டார். அதே போல தயாரிப்பாளர் பிரோஸ் நாடிவாலாவின் வீட்டில் செய்யப்பட்ட சோதனையில் கஞ்சா பொருள் சிக்கியதால் அவரின் மனைவி கைது செய்யப்பட்டார். நடிகர் அர்ஜூன் ராம்பால் வீட்டிலும் சோதனை செய்யப்பட்டது.
இந்நிலையில் மும்பையில் அந்தேரியில் உள்ள நகைச்சுவை நடிகை பாரதி சிங்கின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டபோது கஞ்சா பொருள் சிக்கியது. இதனால் போலிசார் அவரையும் அவரது கணவரையும் நேற்று கைது செய்துள்ளனர்.
சினிமா, டிவி நிகழ்ச்சிகள் என பிரபலமானவர் பாரதி சிங் என்பது குறிப்பிடத்தக்கது.