பெண் புலி மர்ம மரணம்

by Lifestyle Editor
0 comment

நீலகிரி

நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் பெண் புலி ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அதன் இரு குட்டிகளை வனத்துறையினர் மீட்டு பராமரித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்கு உட்பட்ட சிங்காரா வனப்பகுதியில் நேற்று மாலை வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சுமார் 8 வயது மதிக்கத்தக்க பெண் புலி ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் கால்நடை மேய்ச்சலுக்கு சென்ற பழங்குடியின பெண் ஒருவர் புலி தாக்கி உயிரிழந்த நிலையில், புலிக்கு மர்மநபர்கள் விஷம் வைத்து கொன்று இருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகமடைந்தனர். இதனிடையே மாலை நேரம் என்பதால் பிரேத பரிசோதனையை மறுநாள் காலை நடத்த திட்டமிட்டு, இரவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, வனப்பகுதியில் இருந்த பிறந்து 3 வாரங்களே ஆன 2 புலிக்குட்டிகளை மீட்டனர். அவை உயிரிழந்த பெண் புலிக்கு பிறந்தது என தெரியவந்த நிலையில், புலி குட்டிகளுக்கு உணவு கொடுத்து பராமரித்து வருகின்றனர். மேலும், புலி உயிரிழப்பு சம்பவம் குறித்து வனத்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Posts

Leave a Comment