ரியல்எஸ்டேட் அதிபர் கடத்தல் புகார்

by Lifestyle Editor
0 comment

திருப்பத்தூர்

ஆம்பூரில் ரியல்எஸ்டேட் அதிபர் கடத்தப்பட்ட வழக்கில் புதிய திருப்பமாக, திருட்டு நகைகளை வாங்கியது தொடர்பாக அவரை கர்நாடக மாநில போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றது தெரியவந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகைக்கடை தெருவை சேர்ந்தவர் திலீப்குமார். இவர் நகைக்கடை மற்றும் ரியால் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், தொழில் நிமித்தமாக திலீப்குமார் நேற்று விண்ணங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட காட்டுக்கொள்ளை பகுதிக்கு சென்றுள்ளார்.

அப்போது, கர்நாடக பதிவெண் கொண்ட காரில் வந்த மர்மநபர்கள் அவரிடம் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச வேண்டும் கூறி, அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த திலீப்குமாரின் தந்தை விமல்சந்த், தனது மகனை கடத்திவிட்டதாக கூறி, ஆம்பூர் தாலுகா காவல்நிலைய போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வந்தனர். இதில் திலீப்குமாரை அழைத்துச் சென்றது கர்நாடக மாநிலம் பெங்களூரு மேஷாஸ்டிக் காவல் நிலைய போலீசார் என்பது தெரியவந்துள்ளது. மேலும், திருட்டு தங்க, வைர நகைகளை வாங்கிய புகாரின் பேரில், திலீப் குமாரிடம் அவர்கள் விசாரணை நடத்தி வருவதும் தெரியவந்தது. இதனால் இந்த கடத்தல் நாடகம் முடிவுக்கு வந்தது.

Related Posts

Leave a Comment