ராமநாதபுரத்தில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கலம்

by Editor
0 comment

ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே இறந்த நிலையில் கரை ஒதுங்கிய 3 டன் எடையுள்ள ராட்சத திமிங்கலத்தை வனத்துறை அதிகாரிகள் மீட்டு, கடற்கரை பகுதியில் புதைத்தனர். ராமநாதபுரம் அடுத்த ஆற்றங்கரை கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள், அங்கு ராட்சத திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் மிதந்து வருவதை பார்த்துள்ளனர். இதுகுறித்து, அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, வனசரகர் சதீஷ் தலைமையில் அங்கு வந்த வனத்துறையினர் கடலில் மிதந்த வந்த அந்த திமிங்கலத்தை, ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் கரை பகுதிக்கு கொண்டு வந்தனர்.

பின்னர் கால்நடை மருத்துவரை கொண்டு உடற்கூறு ஆய்வுசெய்த வனத்துறையினர், கடற்கரை பகுதியில் ராட்சத பள்ளம் தோண்டி திமிங்கலத்தை புதைத்தனர்.

இதுகுறித்து பேசிய வனசரகர் சதீஷ், உயிரிழந்த திமிங்கலம் சுமார் 3 டன் எடையும், 9 மீட்டர் நீளமும் உடையது என தெரிவித்தார். மேலும், திமிங்கலம் இறப்புக்கான காரணம் குறித்து சரிவர தெரியவில்லை என கூறிய அவர், ராமநாதபுரம் வனச்சரகத்தில் காலநிலை மாற்றத்தால் தொடர்ந்து திமிங்கலங்களும், அரிய வகை மீன்களும் உயிரிழந்து வருவது வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்தார்

Related Posts

Leave a Comment