டி.ஆர் பாலு குற்றச்சாட்டு!

by Editor
0 comment

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்படுவதை எதிர்த்து டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்றத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் உதயநிதி ஸ்டாலினை, இன்று 3ம் முறையாக போலீசார் கைது செய்து வருகின்றனர். திருக்குவளை, நாகையில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இன்று குற்றாலத்திலும் அவர் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே நேற்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் எதிர்கட்சிகளை விமர்சித்து அமித்ஷா பேசியது திமுகவினரிடையே எதிர்ப்பை கிளப்பிய நிலையில் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து கைது, அரசியல் கூட்டங்களுக்கு தடை விதித்த தமிழக அரசின் உத்தரவு உள்ளிட்ட பல விவகாரங்கள் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து கைது செய்யப்படுவதை எதிர்த்து திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், “திமுகவைப் பொறுத்தவரை கைது, சிறை, துன்புறுத்தல் என்பது நாங்கள் பார்த்த ஒன்றுதான். திமுக நடத்தும் நிகழ்ச்சிக்கு மட்டும் அனுமதி மறுப்பது ஏன்? பாஜகவுக்கு ஒரு நீதி திமுகவுக்கு ஒரு நீதியா?” என கேள்வி எழுப்பினார். மேலும், சட்டம் என்பது எல்லாருக்கும் ஒன்றுதான், சட்ட ஒழுங்கை காக்க வேண்டிய காவல்துறை வேடிக்கை பார்க்கிறது என்றும் குற்றஞ்சாட்டினார்.

Related Posts

Leave a Comment