நடிகர் விஜய்யின் அப்பாவான இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் தன் மகனான நடிகர் விஜய்யின் ரசிகர்களை கொண்டு செயல்படும் அமைப்பான விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணயத்தில் பதிவு செய்து குடும்ப பிரச்சனையாக மாறியது.
இதனால் நடிகர் விஜய் தனக்கும் அதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. ரசிகர்கள் அதில் இணைந்து கட்சி பணியாற்ற வேண்டும் என அதிரடியாக அறிக்கை வெளியிட்டார். அதில் பொருளாளராக நியமிக்கப்பட்டிருந்த விஜய்யின் அம்மா ஷோபாவும் அதிலிருந்து விலகுவதாக அறிவித்ததோடு தனக்கு இதுகுறித்து எதுவும் தெரியாது, அசோசியேசன் என சொல்லி தான் என் கணவர் என்னிடம் கையெழுத்து பெற்றார் என கூறினார்.
இதற்கிடையில் இயக்குனர் சந்திரசேகர் அதிரடியாக கூறி வந்த கருத்துக்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இந்நிலையில் அவர் தற்போது விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்ய வேண்டாம் என தேர்தல் ஆணையத்திடம் கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.