நடிகர் சூர்யா தவறவிட்ட சூப்பர் ஹீரோ திரைப்படம்

by Editor
0 comment

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் மிக சிறந்த நடிகராக திகழ்ந்து வருபவர், சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி சமூக நலன்களை செய்து தனது ரசிகர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளார்.

மேலும் இவர் நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் சூரரை போற்று, இப்படம் மிக சிறந்த விமர்சனங்களை பெற்று ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது.

சூர்யா தற்போது இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகவுள்ள நவரச என்ற Anthology திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் ஜீவா நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் முகமூடி. தமிழ் சினிமாவில் வெளியான முதல் சூப்பர் ஹீரோ திரைப்படமான முகமூடி ரசிகர்களிடம் வரவேற்பை பெற தவறியது.

மேலும் இப்படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க அணுகியதே நடிகர் சூர்யாவை தானாம், பின்னர் சில காரணங்களால் அவர் இப்படத்தை தவறவிட ஜீவா நடித்துள்ளார் என தெரியவந்துள்ளது.

Related Posts

Leave a Comment