போலீசால் ஒரு வாலிபர் என்ன செஞ்சார் பாருங்க

by Lifestyle Editor
0 comment

ஒரு பெண் போலீசால் பொது மக்கள் முன்னிலையில் தாக்கப்பட்ட ஒரு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார் .

உ.பி.யின் சீதாபூர் மாவட்டத்தில் உள்ள ஹர்கோனில் உள்ள ஒரு சந்தையில் பிரபாஸ் திவாரி என்ற 25 வயது நபர் கடந்த புதன்கிழமையன்று பைக்கில் போய்க்கொண்டிருந்தார் .அப்போது அவரின் நண்பர் ஒருவர் அந்த சந்தையில் நின்று கொண்டிருந்தார் .மேலும் அவருக்கருகே ஒரு பெண் போலீசும் பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்தார் .அப்போது திவாரி அந்த நண்பரிடம் ‘போகலாம் வரியா ?’என்று கேட்டுள்ளார் .அதை பார்த்து கோபமடைந்த அந்த பெண் போலீஸ் அவர் தன்னைத்தான் அப்படி கூப்பிடுவதாக நினைத்தார் .அதனால் அந்த திவாரியை கடுமையாக தாக்கினார் .மேலும் அங்கு நின்று கொண்டிருந்த பல ஆண் போலீசையும் கூப்பிட்டு அவரை தாக்க சொன்னார் .

ஆனைத்து போலீசாரும் சேர்ந்து அந்த சந்தையில் பொது மக்கள் முன்னிலையில் அந்த வாலிபரை கடுமையாக தாக்கினார்கள் .பிறகு அவரை காவல் நிலையத்துக்கு இழுத்து சென்று அவர் மீது வன்கொடுமை துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்தார்கள் .அதன் பின்னர் அவரை விடுத்தார்கள் .வீட்டிற்கு வந்த திவாரி மிகவும் மன உளைச்சலாக இருந்தார். அதன் பின்னர் திடீரென அவர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார் .இந்த தற்கொலை பற்றி கேள்விப்பட்ட அவரின் உறவினர்கள் அவரின் அருகே இருந்த தற்கொலை குறிப்பை கைப்பற்றினார்கள் அதில் அவர் தன்னுடைய நண்பரை லிப்ட் கொடுத்து பைக்கில் வர கூப்பிட்டதாகவும் ,ஆனால் அருகிலிருந்த பெண் போலீஸ் அவரை கூப்பிடுவதாக தவராக நினைத்து தன்னை அடித்து கொடுமைப்படுத்தியதால் தான் மிக மன வேதனையில் தற்கொலை செய்து கொல்வதாக எழுதியிருந்தார் .போலீசார் அந்த கடிதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்

Related Posts

Leave a Comment