மறுபடியுமா? இரண்டாம் குத்து பட இயக்குனரின் அடுத்த படம் ! டைட்டில் இதுதான் – ரிலீஸ் இந்த மாதம்?

by News Editor
0 comment

கடந்த தீபாவளியான நவம்பர் 14 அன்று பல சர்ச்சைகள், எதிர்ப்புகளுக்கு நடுவே வெளியான அடல்ட் படம் இரண்டாம் குத்து. திகில் கலந்த காமெடி கதை, அடல்ட் ஜோக்குகள் படத்தில் நிரம்பி வழிந்தன.

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் தொடர் பாகமாக இப்படத்தை இயக்கியதோடு தானும் ஹீரோவாக நடித்துள்ளார் இயக்குனர் சந்தோஷ் ஜெயக்குமார்.

முழுக்க முழுக்க இரட்டை அர்த்த வசனங்கள், ஆபாசமான காட்சிகள் என 18 வயதை கடந்தோர் மட்டும் பார்க்கும் படமாக இப்படத்தை வெளியிட்டனர். அதற்கான ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தாலும் பலரின் மத்தியில் கடும் விமர்சனங்களே கிடைத்துள்ளன.

இந்நிலையில் இயக்குனர் சந்தோஷ் ரொமாண்டிக் காமெடி கதையில் அடுத்த படத்தை இயக்கவுள்ளது தெரிகிறது. மிஸ்டர் வெர்ஜின் என படத்திற்கு டைட்டிலையும் வெளியிட்டு அவரே நடிக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இப்படம் 2021 ல் கோடை விடுமுறை ஸ்பெஷலாக வெளியாகவுள்ளதாம்.

இதனால் நெட்டிசன்கள் இதுவும் அடல்ட் படம் தானா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

Related Posts

Leave a Comment