வெளியேறிய சுச்சி.. வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நுழைந்த பிரபலம்; அதிர்ச்சியில் ஷிவானியின் ரியாக்‌ஷன் என்ன?

by News Editor
0 comment

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 48 நாட்களை கடந்துள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் அர்ச்சனா மற்றும் சுசித்ரா ஆகிய இரண்டு பேர் வைல்டு கார்ட் என்ட்ரியாக நுழைந்தனர்.

இதையடுத்து, இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி ஆகிய 3 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளனர்.

தற்போது, பிக்பாஸ் வீட்டுக்குள் மூன்றாவது வைல்டு கார்ட் என்ட்ரியாக சீரியல் நடிகர் ஆசிம் பங்கேற்க உள்ளார் என கடந்த சில நாட்களுக்கு முன்பே வெளியானது.

ஆசிம் கொரோனா சோதனை முடிந்து 15 நாட்கள் குவாரண்டைனில் ஸ்டார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.

மேலும், பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் சுச்சி வெளியேறுவது உறுதியாகியுள்ளது.

நாளைய எபிசோடில் சுசித்ரா வெளியேறுவது ஒளிபரப்பப்படும். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் ஆசிம், வைல்ட் கார்டு என்ட்ரியாக நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எப்படியும் ஷிவானி இடையே பெரும் பிரச்சினை ஏற்படுமா? என பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

 

Related Posts

Leave a Comment