உலகின் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச்சை வீழ்த்தி ஏடிபி டென்னிஸ் இறுதிக்கு முன்னேறினார்

by Lifestyle Editor
0 comment

லண்டன்:

டாப் 8 வீரர்கள் பங்கேற்கும் ஏ.டி.பி. உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்று லண்டனில் நடந்து வருகிறது.

8 வீரர்களும் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பிரிவிலும் 4 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஒரு பிரிவில் டொமினிக் தீம் (ஆஸ்திரியா), மற்றொரு பிரிவில் மெத்வதேவ் (ரஷியா) ஆகியோர் அரை இறுதிக்கு தகுதி பெற்றுவிட்டனர்.

மற்றொரு பிரிவில் ரபேல் நடால் (ஸ்பெயின்), நோவக் ஜோகோவிச் (செர்பியா) ஆகியோர் அரை இறுதிக்கு தகுதி பெற்றனர்.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற அரை இறுதி ஆட்டம் ஒன்றில் ஜோகோவிச் (செர்பியா) – டொமினிக் தீம் (ஆஸ்திரியா) ஆகியோர் மோதினர்.

முதல் செட்டில் 5-5 என சமநிலையில் இருந்தபோது, ஜோகோவிச்சிடம் இருந்து டொமினிக் தீம் போராடி 7-5 என வென்றார்.

இதையடுத்து, டை பிரேக்கர் வரை சென்ற இரண்டாவது செட்டை ஜோகோவிச் 7-6 என தன்வசப்படுத்தினார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டும் டை பிரேக்கர் வரை சென்றது. இதில் சிறப்பாக ஆடிய தீம் 7-6 என கைப்பற்றி அசத்தினார்.

இறுதியில், இதில் டொமினிக் தீம் 7-5 6-7 (10), 7-6 (5) என்ற செட் கணக்கில் உலகின் நம்பர் 1 வீரரை வீழ்த்தினார்.

இந்த வெற்றி டொமினிக் தீமின் 300வது வெற்றி ஆகும். இதன்மூலம் டொமினிக் தீம் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

Related Posts

Leave a Comment