காதலனால் கதறும் கல்லூரி மாணவி

by Lifestyle Editor
0 comment

ஒரு காதலிக்கு குழந்தையை கொடுத்து விட்டு ஓடிப்போன காதலன் மீது ஒரு கல்லூரி மாணவி போலிசில் புகார் கொடுத்தார்.

ராஜஸ்தானில் ஜுன்ஜுனுவில் வசிக்கும் 22 வயது கல்லூரி மாணவியொருவர் குருக்ராமில் உள்ள பலசோலி கிராமத்தில் வசிக்கும் அமன் ஷா (23) என்பவரை 10 மாதங்களுக்கு முன்பு தனது நண்பர் மூலம் சந்தித்தார் .

அப்போது முதல் இருவரும் நண்பரானார்கள் .பின்னர் அவர்களின் நட்பு காதலாக மாறியது .இருவரும் காதலிக்க தொடங்கிய நாள் முதல் ஒன்றாக ஹோட்டல்கள் ,பார்க் ,பீச் என்று உல்லாசமாக இருந்தார்கள் .அதன் பின்னர் அவர்களிருவரும் செக்டர் -40 பகுதியில் ஒன்றாக வாழத் தொடங்கினர்.

இதன் காரணமாக அந்த பெண் கர்ப்பமுற்றார் ஒரு நாள் அவர் டாக்டரிடம் பரிசோதனைக்கு சென்ற போது இந்த விஷயம் அவருக்கு தெரிந்தது .அதனால் அவர் மிகவும் மனவேதனையடைந்தார் .மேலும் அவர் தன் கர்ப்பம் குறித்து தன் காதலருக்கு தகவல் கொடுத்தார். மேலும் தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார் .ஆனால் அவர் அவளை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். அதனால் அவர் மிக மன அழுத்தத்தில் இருந்ததால் அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டது.அதனால் அந்த பெண் தன்னை ஏமாற்றிய அந்த காதலர் மீது போலீசில் புகார் கொடுத்தார் .

இது பற்றி குருக்ராம் பொலிஸ் செய்தித் தொடர்பாளர், “குற்றம் சாட்டப்பட்ட அந்த பெண்ணின் காதலர் அமன் சனிக்கிழமை கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார். ஐபிசியின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் இந்த வழக்கை போலீசார் விசாரிக்கின்றனர்.”என்று கூறினார் .

Related Posts

Leave a Comment