தயாரிப்பாளர் சங்க தேர்தல்: முடிவுகள் நாளை அறிவிப்பு!

by Lifestyle Editor
0 comment

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2020- 22 ஆண்டுகளுக்கான நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்தெடுப்பதற்கான தேர்தல் 22ம் தேதி (இன்று) நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி, தற்போது நீதியரசர் ஜெயச்சந்திரன் தலைமையில் சென்னை அடையாறு எம்ஜிஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வாக்குப் பதிவு தொடங்கியது. 1,303 உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில், இன்று மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெற உள்ளது.

வாக்குப்பதிவுகள் முடிந்ததும், வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கான பதவிகள் அறிவிக்கப்படும். செயற்குழு உறுப்பினர்களுக்கான வாக்குப்பெட்டிகள் பத்திரமாக கல்லூரியிலேயே வைக்கப்பட்டு, நாளை காலை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் டி.ராஜேந்திரன்- தேனான்டாள் முரளி தலைமையில் 2 அணிகள் களமிறங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment