உதயநிதி ஆவேசப்படுவது ஏன்?

by Lifestyle Editor
0 comment

முதல்நாள் திருவாரூர் மாவட்ட பிரச்சாரத்தில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட பின்னர் வேதாரண்யம் கோடியக்காடு உப்பளம் சென்று உப்பு தொழிலாளர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்த உதயநிதி, இரவு வேளாங்கன்னியில் தங்கினார்.

நாகை(தெ) மாவட்ட இளைஞரணியினருடன் வேளாங்கண்ணியில் கலந்துரையாடிய உதயநிதி, வேளாங்கண்ணி பேராலயத்தின் அதிபர் தந்தை பிரபாகர் அடிகளாரை சந்திக்க காலையில் அனுமதி கேட்டபோது, அவர் நேரில் சந்திக்க வேண்டாம். போனிலேயே பேசிக்கொள்ளலாம் என்று சொன்னதாக தெரிகிறது. ஆனால், மாலையில் சந்திக்க வாய்ப்பிருப்பதாக அடிகளார் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் மாலையில் அடிகளாரை சந்தித்து பேசலாம் என்ற முடிவில் இருந்திருக்கிறார் உதயநிதி.

இதற்கிடையில், முதல் நாள் பிரச்சாரத்தில் கைது செய்யப்பட்டது போலவே இரண்டாம் நாள் பிரச்சாரத்திலும் உதயநிதி கைது செய்யப்பட்டார். உலக மீனவர் தினத்தையொட்டியே நாகை அக்கரைப்பேட்டை மீனவ கிராம மக்களை சந்திக்க சென்றார் உதயநிதி. அப்போது உதயநிதி கைது செய்யப்பட்டார். அது குறித்து அவர், ’’அடிமை அரசு மீண்டும் எங்களை கைது செய்துள்ளது. கயிறுகட்டி தடுக்க முடியாதது கடல். அதைப்போல கழகத்தின் எழுச்சியையும் எடுபுடிகளால் அடக்க முடியாது. ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ பிரச்சார பயணம் தொடரும்’’என்று தெரிவித்துள்ளார்.

கைது நடவடிக்கையால், பிரபாகர் அடிகளாரை சந்திக்க முடியாமல் போனதால், அவருடன் காணொலி வாயிலாக பேசினார் உதயநிதி. அது குறித்து உதயநிதி, ‘’அடிமை அரசின் சிறுபுத்தியால் அவரை நேரில் சந்திக்க முடியவில்லை. எனினும், சிறுபான்மையினரின் அரணாக கழகம் என்றும் திகழும் என்ற தலைவர் ஸ்டாலின் வாக்குறுதியை அடிகளாரிடம் சொன்னேன்’’என்று தெரிவித்திருக்கிறார்.

Related Posts

Leave a Comment