‘அமித்ஷா மீது பதாகை வீச முயன்றவர்’ போலீஸ் ஸ்டேஷனில் விடுவிப்பு!

by Editor
0 comment

சென்னையில் நடந்து சென்ற அமித்ஷா மீது பதாகை வீச முயன்றவரை போலீசார் விடுவித்துள்ளனர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவும் அரசு முறை பயணமாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தடைந்தார். அவருக்கு ஏக போக வரவேற்புகள் அளிக்கப்பட்டன. அவர் லீலா பேலஸுக்கு செல்லும் வழியில் பாஜக தொண்டர்கள் காத்துக் கிடந்ததால், காரில் இருந்து கீழே இறங்கிய அமித்ஷா மக்களை நோக்கி கையசைத்துக் கொண்டே சாலையில் நடந்தார்.

அப்போது, சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த நபர் ஒருவர் தான் கையில் வைத்திருந்த பதாகையை அவர் மீதி வீசி எறிய முயன்றார். உடனே அங்கிருந்த பாஜகவினர் அந்த நபரை தாக்க முற்பட்ட நிலையில், மீனம்பாக்கம் போலீசார் அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் நங்கநல்லூர் பகுதியை சேர்ந்த துரைராஜ்(67) என்றும் மோடி வெற்றி பெற்ற போது மக்கள் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் போடுவதாக கூறி ஏமாற்றி விட்டதால் அமித்ஷா மீது பதாகையை வீசி ஏறிய முயன்றதும் தெரிய வந்தது.

இதையடுத்து, துரைராஜ் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில், துரைராஜ் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Related Posts

Leave a Comment