‘ஐந்து கண் கூட்டணி’ நாடுகளை கடுமையாக எச்சரித்த சீனா

by Editor
0 comment

‘ஐந்து கண் கூட்டணி’ என அழைக்கப்படும் அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்ரேலியா, நியூஸிலாந்து, கனடா ஆகிய நாடுகளுக்கு சீனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஹொங்கொங்கில் சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் வெளியுறவு அமைச்சர்களை பணி நீக்கியதன் பின்னணியில் அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்ரேலியா, நியூஸிலாந்து, கனடா ஆகிய நாடுகள் அடங்கிய கூட்டணி, சீனாவுக்கு எதிராக அணி திரண்டுள்ளன.

ஹொங்கொங்கில் அதிருப்தியாளர்களின் வாயடைக்கும் வேலையை சீனா செய்கிறது என இந்த கூட்டணி விமர்சனம் செய்தது. இந்தநிலையில், இதற்கு சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவ் லீஜன் பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘அவர்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் கண்கள் பிடுங்கப்படும். சீனா எப்போதும் தொல்லை கொடுப்பதில்லை. எதைப் பார்த்தும் அஞ்சுவதும் இல்லை. அவர்களுக்கு 5 கண்கள் இருக்கிறதா அல்லது 10 கண்கள் இருக்கிறதா என்பது பிரச்சனையே அல்ல’ என கூறினார்.

.

Related Posts

Leave a Comment