டிசம்பர் இறுதியில் பிரெக்சிட் மாறுதல் காலம் அமுலுக்கு வர இருக்கும் நிலையில், பிரித்தானியாவுக்கும் பிரான்சுக்கும் இடையில், மீண்டும் மீன் பிடித்தல் தொடர்பான உரசல் தொடங்கிவிட்டது.
டிசம்பர் மாதத்துடன் பிரெக்சிட் Xavier Leduc முடிவுக்கு வருகிறது. இந்நிலையில், பிரித்தானியா எடுக்கும் முடிவு, பிரான்ஸ் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்க விடமாட்டேன் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் அழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளார்.
இப்படிப்பட்ட ஒரு சூழலில்இ வட பிரான்ஸ் மீனவர்கள் யூனியனின் தலைவரான Olivier Leprtre,பிரித்தானிய கடல் பகுதியில் பிரான்ஸ் மீனவர்களை மீன் பிடிக்க அனுமதி மறுத்தால் பழிக்குப் பழிவாங்குவோம் என எச்சரித்துள்ளார்.
அதாவது, பிரித்தானியாவில் பிடிக்கும் மீன்களை பிரித்தானியர்கள் ஐரோப்பிய ஒன்றிய சந்தையில் விற்றாகவேண்டும், அவர்களை ஐரோப்பிய ஒன்றிய சந்தையில் விற்க அனுமதிக்கமாட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.
வணிகர் சங்க தலைவரான Georges Thomas, பிரித்தானிய பகுதி மீன்கள், பிரான்ஸ் பகுதி மீன்கள் என பிரிக்கப்படுவதே அர்த்தமற்ற பேச்சு என்கிறார்.
மீன்கள் பிரெஞ்சு கடற்கரை பகுதியில் இனப்பெருக்கம் செய்கின்றன, பின்னர் அவை ஆழமான கடல் பகுதிக்கு செல்கின்றன.
பிரித்தானிய பகுதி ஆழமான கடல் பகுதி, ஆகவேதான், மீன்கள் பிரித்தானிய கடற்பகுதி நோக்கி செல்கின்றன என்று கூறும் அவர், ஆகவே, பிரெஞ்சு மீன், பிரித்தானிய மீன் என்றெல்லாம் ஒன்றும் கிடையாது என்கிறார் அவர்.